சென்னை:

தென்பெண்ணையாறு குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த தவறிய தமிழக அரசை கண்டித்து, 5 மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்து உள்ளது.

அதன்படி,  கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டத் தலைநகரங்களில் வரும் 21-ம் தேதி ஆர்ப்பாட்டம்  “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்து உள்ளது.

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணைகட்ட முயற்சி செய்வதை எதிர்த்து தமிழகஅரசு உச்சநீதி  மன்றத்தில் வழக்கு தொடர்ந்து. இந்த வழக்கில் தமிழகஅரசு போதிய ஆவனங்களை தாக்கல் செய்ய வில்லை என்று, தமிழகஅரசின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதி மன்றம், கர்நாடகா அரசு அணை கட்ட அனுமதி வழங்கியது.

இந்த நிலையில்,  தமிழக உரிமையை பாதிக்கும் தென் பெண்ணையாற்று திட்டங்களை தடுத்து நிறுத்துவதில் தோல்வி கண்டுள்ள அதிமுக அரசை கண்டித்து திமுக சார்பில் வருகின்ற 21-ம் தேதி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும்,  அந்த ஆர்ப்பாட்டத்தில் கிளை, ஒன்றிய, பேரூராட்சி, நகராட்சி, மாவட்டக் கழக நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்,” என்றும் திமுக தலைமைக்கழகம்  தெரிவித்து உள்ளது.