விஷாலை எதிர்த்து பொன்வண்ணன் ராஜினாமா!

சென்னை,

டிகர் சங்க துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து நடிகர் பொன்வண்ணன் ராஜினாமா செய்துள்ளார்.

அவர் சங்கத்தலைவர் நாசருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடந்த கால நடிகர் சங்க நிர்வாகிகளை குறைசொல்லி அதன் காரணமாக வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்த நாம், அதே தவறை செய்வது சரியா..? கேள்வி விடுத்துள்ளார்.

நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும், திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருந்து வரும் விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். இது திரையுலகில் பிரச்சினை களை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்திலும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், நடிகர் சங்க துணைத்தலைவராக  உள்ள நடிகர் பொன்வண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து அவர்  அவர் நடிகர் சங்க தலைவர் நாசருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

நமது “செயலாளர்”ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்திருப்பதை தொலைக் காட்சியில் பார்த்து அதிர்ச்சியடைந் தேன். கடந்தகால நிர்வாகிகளை இதை காரணம் காட்டி, குறைசொல்லி, பொறுப்புக்கு வந்த நாம், அதே தவறை செய்வது சரியா..?  இதனால் எதிர்காலத்தில் அரசியலற்ற “நடிகர் சங்க தலைமை” என்ற நம்பிக்கையே அடிபட்டு போகிறது.

வருகிற ஐனவரி 7-ம் தேதி மலேசியாவில் நடக்கிற கலை நிகழ்ச் சிக்கு 200-க்கு மேற்பட்ட நடிகர்களை அழைத்து போக வேண்டியுள்ளது. நிகழ்ச்சி பற்றி பல விவாதங்கள் செய்ய வேண்டி யுள்ளது.  அதையெல்லாம் உடனிருந்து திட்டமிடுவதை விட்டு, தேர்தல் களத்திற்கு சென்று விட்டால், இங்கே பொதுச் செயலாளர் வேலையை, முடிவை யார் எடுப்பார்கள்?

எனவே, இதற்குபின் இப்பொறுப்பில் இருந்தால், எதிர் காலத்தில் என் தனித் தன்மையை இழப்பதுடன், முரண்பாடான மன நிலை யிலும் செயல்பட வேண்டி வரலாம். அது தற்போதைய நிர்வாக செயல்பாட்டிற்கு தடையாக மாறும். உடன்பாடில்லாத விசயங்களில் மவுனம் காப்பது, அல்லது வீண் விவாதங்களில் ஈடுபடுவது இரண்டுமே ஆரோக்கியமான தல்ல.! எனவே “துணைத் தலைவர்”பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில்  தயாரிப்பாளர் சங்க கவுரவ செயலாளராக இருந்த கே.ஈ.ஞானவேல் ராஜா தனது பதவியை ராஜினாமா செய்ததும் குறிப்பிடத்தக்கது.