மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு மேலும் தாமதமாகும் எனத் தெரிகிறது.
இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்புத் தளத்தில் அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், உதவியாளர்கள் என குறைந்தது 400 பேர் வருகிறார்கள். ஆனால், தமிழக அரசோ 100 பேருக்கு மேல் ஆட்களை வைத்துப் படப்பிடிப்பு செய்யக்கூடாது எனத் தெரிவித்துள்ளது.இதனால் படப்பிடிப்பு மேலும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .