ஜனவரியில் தொடங்கும் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு….!

மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’.

இந்தப் படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தக் கூட்டணியில் சின்ன பழுவேட்டரையராக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நிழல்கள் ரவி.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனாஅச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு முன்னணி நடிகர்கள் நடிப்பதால் அவர்களுக்கான உதவியாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள் என ஒட்டுமொத்தமாக 400 பேர் வரை இருப்பதால் படப்பிடிப்புக்கு வாய்ப்பில்லாமல் இருந்தது. தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஜனவரி மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க, படக்குழு ஆயத்தமாகி வருகிறது.