நாளை முதல் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தொடக்கம்…..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இந்தப் படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில், நாளை (ஜனவரி 6) முதல் ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தொடங்குவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் ஹைதராபாத் வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்குமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.