மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’.

இந்தப் படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தக் கூட்டணியில் சின்ன பழுவேட்டரையராக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நிழல்கள் ரவி.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனாஅச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் .