கல்கியின் பொன்னியின் செல்வன் கதையைத் திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்டநாள் கனவு . ஆனால் போஸ்டர்வரை வந்து அந்தப் படம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் சனீஷ்வர் அனிமேஷன்ஸ் நிறுவனம் வந்தியத்தேவன் :பொன்னியின் செல்வன் பாகம் 1’ என்ற பெயரில் அனிமேஷன் திரைப்படமாக கல்கியின் புகழ்பெற்ற நாவலை தயாரித்துள்ளது.

எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் அன்று அவரது கனவை நனவாக்கும் வகையில் இத்திரைப்படத்தின் பாடல் ஒன்றை இக்குழு வெளியிட்டுள்ளது. ரமேஷ் தமிழ்மணி இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

சந்தோஷ் ஜெயகரனின் குரலில், எம்.ஜி.ஆருக்காக எழுதப்பட்ட வரிகள். அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்த எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் அன்று இந்தப் பாடலை வெளியிட்டு அவருக்கு மரியாதை செய்துள்ளது படக்குழு.

மதன் கார்க்கி இந்தப் படத்திற்கு வசனம் மற்றும் பாடல்களை எழுதியுள்ளார். தவச்செல்வனின் இயக்கத்தில் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இந்த ஆண்டு பல்வேறு இந்திய மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.