​சபரிமலையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்ட பொன்.ராதாகிருஷ்ணன்

பரிமலைக்குச் சென்றிருக்கும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அங்கு காவல்துறையினரால் சிறிது நேரம் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து இரு முடியுடன் சபரிமலைக்கு சென்ற மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னதாக நிலக்கல் பகுதிக்குச் சென்றார். அங்கிருந்து அனைத்து பக்தர்களும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், சமீபத்திய புயலால் பாதை இன்னமும் முழுதுமாக சீரமைக்கப்படாததாலும், அரசுப் பேருந்தில் சபரிமலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அது போல பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் அரசுப் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பொன்.ராதாகிருஷ்ணன், தானும் தன்னுடன் வந்தவர்களும் தனிப்பட்ட வாகனத்தில்தான் செல்வோம் என்று வாக்குவாதம் செய்தார். ஆனால் இதற்கு கேரள காவல்துறையினர் மறுத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பிறகு அவரும் அவருடன் வந்தவர்களும்  காவல்துறையினரின் நடைமுறையை ஏற்று   கேரள அரசு பேருந்தில் சபரிமலைக்கு  சென்றனர்.

 

 

#ponradhakrishnan #stopped  #kerala #police #sabarimala