ராதே ஷ்யாம்’ பூஜா ஹெக்டே கதாபாத்திர லுக் வெளியீடு…!

ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ராதே ஷ்யாம்’ .

‘சாஹோ’ படத்தைத் தயாரித்த யு.வி கிரியேஷன்ஸ் நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டது படக்குழு.

ட்விட்டர் தளத்தில் உலகளவில் ட்ரெண்ட்டானது. சுமார் 24 மணி நேரத்தில் 6.3 மில்லியன் ட்வீட்கள், #RadheShyam ஹேஷ்டேக்கில் வெளியிட்டுள்ளனர்.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்து வருகிறார். இதனிடையே, இன்று (அக்டோபர் 13) பூஜா ஹெக்டே தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார்.

‘ராதே ஷ்யாம்’ படக்குழுவினரோ, பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளுக்கு பிரத்யேக போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ‘ப்ரேரணா’ என்ற கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே நடித்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளது.