‘சூரரைப் போற்று’ படத்தைத் தொடர்ந்து, ஹரி இயக்கத்தில் உருவாகவுள்ள ‘அருவா’ படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் சூர்யா.

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு இமான் இசையமைக்கவுள்ளார். இந்தப் படம் தலைப்பு பிரச்சினையிலும் சிக்கியுள்ளது.

கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. அவரோ படப்பிடிப்புத் தேதிகளை முடிவு செய்துவிட்டுச் சொல்லுங்கள். என் தேதிகள் இருந்தால் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.