ராஜஸ்தான் : பூஜா அதிவிரைவு ரெயில் தடம் புரண்டது.

புலேரா, ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலம் புலேராவில் பூஜா அதிவிரைவு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியது.

பூஜா அதிவிரைவு ரெயில் ஜம்மு தாவி – அஜ்மீர் இடையே செல்லும் அதிவிரைவு ரெயில் ஆகும்.   இந்த ரெயில் இன்று அஜ்மீரில் இருந்து கிளம்பி ஜம்மு தாவிக்கு சென்றுக் கொண்டிருந்தது.   அந்த ரெயில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புலேரா அருகே சென்றுக் கொண்டு இருந்தது.

அப்போது திடீரென அந்த ரெயில்ன் மூன்று பெட்டிகள் தடம் புரண்டுள்ளன.   ரெயிலின் ஓட்டுனர் உடனடியாக ரெயிலை நிறுத்தி உள்ளார்.  அதனால் உயிர் சேதம் தடுக்கப்பட்டுள்ளது.

ரெயில்வே ஊழியர்கள் மீட்புப் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்,   விரைவில் மீட்புப்பணிகள் முடிவடையும் எனவும் பணிகள் முடிந்த உடன் ரெயில் புறப்படும் எனவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.