திருவரங்கம் (ஸ்ரீரங்கம்)  அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம்.  பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவது ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில்.

காவிரி ஆற்றினால் சூழப்பட்டதும், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளது மான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும்.

இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது.

இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது.

ஆழ்வார்கள் பதின்மறால் பாடல் பெற்றதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் திருப்பவித்ரோத்சவம் வருகிற 2-ந்தேதி (சனிக்கிழமை) தொடங்கி 10-ந் தேதி வரை நடக்கிறது.

ஆவணி மாதத்தில் வரும் ஏகாதசி திதியை தொடக்கமாக கொண்டு திருப்பவித்ரம் நடைபெறு கிறது.இதில் முதல் நாளன்று பூபரத்திய ஏகாதசி என்றழைக்கப்படுகிறது.

யாகசாலையின் முன்புறம் பரத்தி வைக்கப்பட்ட பூக்கள் மீது நம்பெருமாள் எழுந்தருளி பின்னர் யாகசாலையில் சேவை சாதித்து திருமஞ்சனம் கண்டருளுவார். 9-ம் நாள் தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் கண்டருளுவது முக்கிய அம்சமாகும்.

முன்னதாக 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அங்கோபாங்க சேவை(பூச்சாண்டி சேவை) நடக்கிறது. அன்று நம்பெருமாள் உற்சவர் மற்றும் மூலவர் திருமேனி முழுவதும் திருப்பவித்ரம் சாற்றப்பட்டு இருக்கும். அன்று மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மூலவர் சேவை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.