கிராமத்து அணைக்கட்டில் ஆபாச சினிமாவில் நடித்த இந்தி நடிகை பூனம் பாண்டே கைது..

 

அடிக்கடி பிரச்சினையில் மாட்டிக்கொள்ளும் இந்தி நடிகை பூனம் பாண்டே மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

கோவா மாநிலம் கனகோனா கிராமத்தில் சபோலி அணைக்கட்டு உள்ளது.

அனுமதி இல்லாமல் இந்த அணை உள்ள பகுதியில் பூனம் பாண்டே ஆபாச சினிமா படப்பிடிப்பில் நடித்துள்ளார்.

அணையில் அருவருக்கதக்க வகையில் சைகை காட்டி, பூனம் நடனாடும் ஆடும் வீடியோக்களை அவரே வெளியிட்டதாக தெரிகிறது.

அந்த வீடியோ வலைத்தளங்களில் பரவிய நிலையில். பூனம் பாண்டே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவா மாநில பார்வர்ட் பிளாக் கட்சியின் மகளிர் பிரிவினர் போலீசில் புகார் அளித்தனர்.

பூனம் பாண்டேயை கைது செய்ய வலியுறுத்தி, கனகோனா கிராமத்தில் நேற்று கடை அடைப்பு போராட்டம் நடத்த பொது மக்கள் முடிவு செய்தனர்..

இதையடுத்து ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த பூனம் பாண்டே மற்றும் அவரது கணவர் சாம் அகமது பாம்பே ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் இருவரும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

பாதுகாக்கப்பட்ட அணைப்பகுதியில் ஷுட்டிங் நடந்த அனுமதி அளித்த அந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டுள்ளார். .

– பா. பாரதி