ஐசிசி அறிவித்துள்ள லெவன் அணி – ஒரு இந்திய வீராங்கனைக்கு மட்டுமே இடம்!

துபாய்: டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஐசிசி அறிவித்துள்ள லெவன் அணியில், இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் தரப்பில் பூனம் யாதவ் மட்டுமே இடம் பிடித்துள்ளார்.

அதேசமயம், 12வது வீராங்கனையாக இந்தியாவின் ஷபாலி வர்மாவுக்கு இடம் கிடைத்துள்ளது.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பெண்கள் டி-20 உலகக்கோப்பையில், வீராங்கனைகளின் செயல்பாடுகளின் அடிப்படையில், தனது லெவன் அணிக்கான பட்டியலில் அவர்களுக்கு இடமளித்து வருகிறது ஐசிசி.

அதனடிப்படையில், இந்த லெவன் அணியை தேர்வு செய்வதற்கான குழுவில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இயான் பிஷப், இந்தியாவின் அஞ்சும் சோப்ரா மற்றும் ஆஸ்திரேலியாவின் லிசா உள்ளிட்ட 5 பேர் இடம்பெற்றிருந்தனர்.

இதன்படி, பெண்கள் டி-20 உலகக்கோப்பைத் தொடரில் மொத்தம் 10 விக்கெட் வீழ்த்திய பூனம் யாதவுக்கு ஐசிசி அணியில் இடம் கிடைத்துள்ளது. மொத்தம் 163 ரன்களை எடுத்த ஷபால் வர்மா 12வது வீராங்கனையாக தேர்வானார்.

அதேசமயத்தில், உலகக்கோப்பையை 5வது முறையாக வென்ற ஆஸ்திரேலிய அணியிலிருந்து லெவன் அணிக்கு தேர்வானவர்களின் எண்ணிக்கை 5 என்பது குறிப்பிடத்தக்கது.