accident 1
 
மோசமான அமலாக்கம், மனிதவள பற்றாக்குறை- விபத்துக்களுக்கான முக்கிய காரணம்
ஒழுக்கமின்மையே சந்திப்புகளில் விபத்துகள் ஏற்பட காரணம் என நகர போக்குவரத்து போலீஸ் குறை கூறினாலும், மோசமாக வடிவமைக்கப்பட்டுள்ள சந்திப்புகள், போக்குவரத்தைக் கட்டுப்படுத்த மனிதவள பற்றாக்குறை, மற்றும் மோசமாக அமலாக்கம் செய்யப்படும் விதிகள் ஆகியவை தான் விபத்துக்கள் ஏற்பட முக்கிய காரணங்கள் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

“மரணத்திற்கு வழிவகுத்தால் கூட எல்லோருக்கும் சிக்னலில் அவர்கள் தான் முதலில் செல்ல வேண்டும். போலீஸ்காரர்கள் சுற்றி இருக்கும் போது கூடச் சில ஓட்டுனர்கள் கவலைப்படுவதில்லை,” என்று அண்ணா நகரில் உள்ள போக்குவரத்து காவலர் ஒருவர் கூறினார். “என்ன தான நீங்கள் சிறந்த ஓட்டுனராக இருந்தாலும், அனைத்து பக்கங்களிலும் இருந்து வாகனங்கள் வரும் நிலையில், அவசரமாக வண்டியை ஓட்டுவது நல்லதல்ல,” என்று அவர் கூறினார்.
ஆனால் நிபுணர்கள், சாலை பாதுகாப்பு என்பது ஒழுக்கம் மற்றும் அமலாக்கத்திற்கு அப்பாற்பட்டது என்று கூறுகின்றனர்.
“ஒரு நல்ல தெரு வடிவமைப்பு என்பது ஒரு தூங்கும் போலீஸ்காரர் போல் செயல்படுகிறது,” என்று போக்குவரத்து மற்றும் மேம்பாட்டு கொள்கை (ITDP) பயிலகத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் அத்வைத் ஜானி கூறினார். வாகனத்தில் வருபவர்கள் சந்திப்பை நெருங்கும் போது மெதுவாக வருமளவிற்கு சந்திப்புகள் வடிவமைக்கப்பட வேண்டும், என்று அவர் கூறினார். “இன்னர் ரிங் ரோடு மற்றும் அண்ணா சாலை போன்ற சாலைகள் பெரிய சந்திப்புகளைக் கொண்டுள்ளது, இது வாகன ஓட்டிகளை சிக்னலைத் தவிர்க்கத் தூண்டுகிறது. வாகன ஓட்டிகள் வேகத்தைக் குறைக்க வேண்டுமென்றால் சாலையைக் குறுகியதாக மாற்ற போக்குவரத்து சீராக்கிகள் இருக்க வேண்டும்,” என்று ஜானி கூறினார்.
பாதுகாப்பான மற்றும் சிறந்த சந்திப்புகளுக்கான மற்ற காரணிகள் என்னவென்றால், சரியான விளம்பரம் மற்றும் தெளிவாக வரையறுக்கப்பட்ட பாதசாரிகளுக்கான பாதைகள், வாகன ஓட்டிகளுக்கு தடையில்லாத பார்வை, எந்த இடையூறும் திசை திருப்பமும் இல்லாத நன்கு செயல்படும் போக்குவரத்து சிக்னல்கள். “இந்த விஷயங்களில் குறைந்தது ஒன்றாவது இப்போது இருக்கும் சிக்னல்களில் இல்லை. தரமான இயங்கும் சிக்னகள் இருந்தாலும் அதைப் பற்றிப் பலரும் கண்டு கொள்வதில்லை. இதில் மோசமானது என்னவென்றால் ஆளில்லா சிக்னல், அங்கே சட்டத்திற்கோ அல்லது சக வாகன ஓட்டுனரின் பாதுகாப்பிற்கோ துளிகூட மதிப்பில்லை, ” என்று தி.நகரிலிருந்து பயணிக்கும் எம் ஸ்ரீதர் என்றவர் கூறினார்.