ஏழை இஸ்லாமிய பெண்களுக்கு ஒரே மேடையில் திருமணம் : உ.பி. முதல்வர் யோகி ஆதித்யா அறிவிப்பு

லக்னோ,

ழை இஸ்லாமியப் பெண்களுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைக்கும் திட்டத்திற்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யா ஒப்புதல் அளித்துள்ளார். அந்த மாநிலத்தின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மோஷின் ராஜா இதனைத் தெரிவித்துள்ளார்.

முதல் 100 நாட்களில் நிறைவேற்ற வேண்டிய யோகி ஆதித்யா அரசின் திட்டங்களின் பட்டியலில் ஏழை இஸ்லாமியப் பெண்களுக்கு ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்கும் திட்டமும் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்து வைப்பதுடன் அவர்களகுக்கு நேரடி பண உதவியாக ரூ20 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். திருமண நிகழ்வுக்கான செலவை அரசே ஏற்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதர கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட இதர சிறுபான்மை இன மக்களுக்கும் இந்ததத் திட்டம் விரிவு படுத்தப்படும் என்றும் மோஷின்ராஜா தெரிவித்துள்ளார்.