வங்கிக் கணக்கு தொடங்க, ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டால், ஏழைகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பலவித திட்டங்களில் ஆரம்பித்து மக்களுக்கான நலத்திட்டங்கள் வரையிலும், தற்போது ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், புதியதாக வங்கிக் கணக்கு தொடங்க, ஆதார் எண் கட்டாயம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, வங்கிக் கணக்கு வைத்திருப்போர் ஆதார் எண்ணை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்றும்  அறிவித்துள்ளது மத்திய அரசு.

இதற்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

“ஏழைகளை மிகவும் பாதிக்கக்கூடிய செயல் இது. வங்கிக் கணக்கு துவங்க ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கட்டாயமாக்கலாம்.  அதை தவிர்த்துவிட்டு, ஆதார் எண்ணை கட்டாயமாக்குவது ஏற்புடையதல்ல” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் மம்தா தெரிவித்துள்ளார்.