‘தலைவி’ படத்தில் இணையும் நடிகை பூர்ணா…!

விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத் நடிக்கவுள்ள படம் ‘தலைவி’. இது மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட படமாகும். இதில் ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடிக்கவுள்ளார்.

இந்த படம் தமிழ் , தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகவுள்ளது .

நீரவ் ஷா ஒளிப்பதிவாளராகவும், ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தை விஷ்ணுவர்தன் இந்தூரி தயாரிக்கவுள்ளார். அடுத்த ஆண்டு இறுதியில் படத்தை வெளியிட முடிவெடுத்துள்ளனர்.

இப்படத்தில் எம்.ஜி.ஆராக நடிக்க அரவிந்த்சாமி நடிக்கிறார் . சமீபத்தில் தலைவி படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதேபோல் எம்ஜிஆராக மாறிய அரவிந்த் சாமி புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகை பூர்ணா இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் நடிகை பிரியா மணி, நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது