தனது பயோபிக்கை தானே இயக்கும் பாப் பாடகி மடோனா….!

அமெரிக்காவைச் சேர்ந்த பாடகி மடோனா கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேல் இசைத்துறையில் கோலோச்சி வருகிறார் .

மடோனாவின் பாடல் பதிவுத் தட்டுகள் 33.5 கோடிக்கும் அதிகமாக உலகளவில் விற்பனையாகியுள்ளது.

தற்போது மடோனாவின் வாழ்க்கைக் கதை திரைப்படமாக உருவாகிறது. இதை மடோனாவே இயக்கவுள்ளார். யூனிவர்ஸல் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கான திரைக்கதையை ஆஸ்கர் விருது வென்ற டயாப்லோ கோடி எழுதுகிறார்.

ஒரு பிரபலமே தன்னைப் பற்றிய படத்துக்கு இயக்குநராக மாறியுள்ளது இதுவே முதல் முறை.