வாடிகன்,

லக கத்தோலிக்க மத தலைவரான போப் ஆண்டவர் இந்தாலி நாட்டின் வாடிகன் நகரில் வசித்து வருகிறார். வாடிகன் நகரம் முழுவதும் போப் ஆண்டவரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.

இந்நிலையில், சிகரெட் காரணமாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் மடிவதால்,  வாடிகன் நகரில் சிகரெட் விற்பனையை தடை செய்து போப் பிரான்சிஸ் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ரோமன் கத்தோலிக்க  கிறிஸ்தவர்களின் புனித தலமாக திகழ்ந்து வருவது வாடிகன் நகர். இங்கு உலகம் முழுவதும் இருந்து  தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து போப் ஆண்டவரை தரிசித்தும், அங்குள்ள தேவாலயங்களில் பிரார்த்தனை செய்தும் செல்வர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் சிகரெட் விற்பைன வெகு ஜோராக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிகரெட் பிடிப்பதால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழப்பதாக சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதையறிந்த போப் பிரான்சிஸ்,  புனித நகரமான வாடிகனில் மக்களின் உடல்நலம் பாதிக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கூறி தடை விதிப்பதாக அறிவித்து உள்ளார்.

போப் பிரான்சிஸ்-ன் இந்த அதிரடி அறிவிப்புக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.