வாடிகன்: வயது முதிர்வு காரணமாக, உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள  போப் பிரான்சிஸ், வாடிகனில்  வழக்கமாக நடைபெறும் புத்தாண்டு பிரார்த்தனையில் பங்கேற்பதை தவிர்த்துள்ளார்.

வழக்கமாக வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் 2020-ம் ஆண்டு நிறைவு பிரார்த்தனை மற்றும் நள்ளிரவு புத்தாண்டை வரவேற்கும் விதமான பிரார்தனைகள் நடைபெறும். இந்த பிரார்த்தனையில் கலந்துகொள்ள உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் வாடிகனில் குவிவர். இந்த ஆண்டு, கொரோனா தொற்று காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்த நிலையிலும், நேற்று பிரார்த்தனைகள் நடைபெற்றது.

ஆனால்,  கடுமையான முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் போப் ஆண்டவர் பிரான்சிஸ், எந்தவொரு பிரார்த்தனையிலும் கலந்துகொள்ளவில்லை.இன்று மதியம் அவர் அப்போஸ்தலிக் அரண்மனை நூலகத்தில் தோன்றி புத்தாண்டு ஆசி வழங்குவார்  என  அவரது செய்தி தொடர்பாளர் மேட்டியோ புரூனி தெரிவித்தார்.

85 வயதாகும் போப் பிரான்சிஸ்  ‘சியாட்டிகா’ என்ற பிரச்சினையால் முதுகு, கால் வலியால் கடந்த காலத்திலும் அவதியுற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.