கிறிஸ்துமஸ்: அகதிகளுக்காக வாடிகனில் போப்பாண்டவர் பிரார்த்தனை

வாடிகன்,

சு பிறந்த தினத்தை முன்னிட்டு வாடிகனில் போப்பாண்டவர் அருள் உரை நிகழ்த்தினார். அப்போது அகதிகளுக்காக அவர் பிரார்தனை செய்தார்.

ஏசு கிறிஸ்து பிறந்த நாளா டிசம்பர் 25ந்தேதியை முன்னிட்டு, 24ந்தேதி நள்ளிரவு நாடு முழுவதும் தேவாலயங்களில் பிரார்த்தனை நடைபெற்றது.

அதை முன்னிட்டு, கத்தோலிக்க தலைநகரான வாட்டிகன் நகரில் நடைபெற்ற நள்ளிரவு பிரார்த்தனையில் போர் ஆண்டவ்ர் பிரான்சிஸ் அருளுரை ஆற்றினார். இந்த கூட்டத்திற்கு பல்லாயிக்கணக்கானோர்  திரண்டனர்.

அப்போது போப் ஆண்டவர் பிரான்சிஸ் பேசியதாவது,

தங்களுக்கென இடமில்லாத ஒரு உலகில்தான் அன்னை மேரி ஏசு பாலகனோடு வந்தார் என்று கூறிய அவர், நிகழ்காலங்களிலும் இதற்கான உதாரணங்களாக ரோஹிங்கா அகதிகளையும் சுட்டிக் காட்டினார்.

இதற்காக, மேரி மற்றும் யோசேப்புடன் ஒப்பிடுகையில், நாசரேத்திலிருந்து பெத்லகேமுக்குச் செல்ல வேண்டியிருந்தது, ஆனால் தங்க இடம் கிடைக்கவில்லை என்பதை விவிலியக் கதையைப் பற்றிக் குறிப்பிட்டார்.

லட்சக்கணக்கான குடும்பங்கள் கருணையே இல்லாமல் நிலங்களில் இருந்து விரட்டப்படுவதை காண்கிறோம் என்று கூறிய அவர்,  பல குடியேறியவர்கள், “குற்றமற்ற இரத்தம் சிந்தப்படுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை” என்ற தலைவர்களிடம் இருந்து தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது   தங்கள் அன்புக்குரியவர்களை விட்டு விட்டு பலர் பலவந்தமாக வெளியே விரட்டப்படுவதாக தெரிவித்தார்.

அச்சத்தை அதிகாரமாக மாற்ற தானம் செய்யுங்கள் என்றும் உபதேசித்தார்.