பிரபல திரைப்பட இயக்குநர் ஐ.வி.சசி காலமானார்

சென்னை,

பிரபல தமிழ், மலையாளம் திரைப்பட இயக்குநரும், நடிகை சீமாவின் கணவருமான ஐ.வி.சசி இன்று காலமானார்.

 

69வயாபன  ஐ.வி.சசி, கடந்த சில தினங்களாக உடல் நலமின்றி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று  வந்துள்ளார். சிகிச்சை பலனின்றி  அவரது உயிர் பிரிந்தது.

ஐ.வி.சசி, தமிழில் அலாவுதீனும் அற்புத விளக்கும், பகலில் ஒரு இரவு, ஒரே வானம் ஒரே பூமி, குரு, எல்லாம் உன் கைராசி, காளி, இல்லம், கோலங்கள் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். இதில் பிரபலமான  கமல்ஹாசன் நடித்த அலாவுதீனும் அற்புத விளக்கும், குரு திரைப்படங்களும், நடிகர் ரஜினிகாந்த் நடித்த காளி திரைப்படமும் குறிப்பிடத்தக்கது.

ஐ.வி. சசி, இயக்கத்தில் வெளிவந்த அவளோட ராவுகள் படத்தில் நடித்த சீமாவை மணந்து கொண்டார். ஐ.வி.சசி-சீமா தம்பதிக்கு அனு, அனி என்ற 2 மகள்கள் உள்ளனர்.

இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், இந்தி மொழிகளில் திரைப்படங்கள் இயக்கி இருக்கிறார்.