பிரபல இந்தி நடிகர் ஓம்பூரி மாரடைப்பால் காலமானார்!

மும்பை,

பிரபல இந்தி நடிகரும், தேசிய விருது பெற்றவருமான நடிகர் ஓம்பூரி மாரடைப்பால் காலமானார்.

தேசிய விருது பெற்ற மூத்த நடிகர் 66 வயதான ஓம் பூரி இன்று காலை  மாரடைப்பால் மரணமடைந்தார்.

1950-ம் ஆண்டு ஹரியானா மாநிலம் பாட்டியாலாவில் பிறந்த அவர், காஷிராம் கோட்வால் என்ற மராத்திப் படத்தில் முதன் முதலாக அறிமுகமானார். அதன் பிறகு பல இந்திப் படங்களில் நடித்து, தனக்கென தனி பானியை உருவாக்கினார்..

கன்னடம், தெலுங்கு, பஞ்சாபி, மலையாளப் படங்களிலும் நடித்துள்ள ஓம் பூரி, பாலிவுட்டில் தனது நுணுக்கமான நடிப்பால் தலை சிறந்த நடிகராக திகழ்ந்தார்.

1984-ல் வெளியான அர்த் சத்யா  என்ற படத்துக்காக  சிறந்த நடிகருக்கான தேசிய விருதி அவருக்கு வழங்கப்பட்டது. 1990-ம் ஆண்டு அவருக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

சமீபத்தில் அவர் நடித்த மலையாளப் படம் ஒன்று செண்பகக் கோட்டை என்ற பெயரில் தமிழில் வெளியானது.

இன்று காலை அவருக்க திடீரென  மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிர் பிரிந்தது. அவரது மரணம் பாலிவுட் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு இந்தி நடிகர், நடிககள், தயாரிப்பாளர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

You may have missed