டில்லி

மொபைல் நிறுவனங்களான லாவா, இண்டெக்ஸ், மைக்ரோமேக்ஸ்,கார்பன் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் விற்பனைப் பிரிவு பணியாளர்களை ஆட்குறைப்பு செய்துள்ளது.

சமீப காலங்களாக சந்தையில் பலவகை மொபைல் ஃபோன்கள் விற்பனைக்கு உள்ளன.   அந்த மொபைல்களுக்கான தேவைகளும் முன்பு போல் இப்போது இல்லை.   தினசரி ஒரு புதிய மாடல் வருவதால் பல நிறுவனங்களில் விற்பனை மந்தமாகவே உள்ளன.   தற்போதுள்ள நிலவரப்படி கடந்த ஆறு மாதங்களில்விற்பனையில் முன்னணியில் இருப்பவை ஜியோமி மற்றும் சாம்சங் மட்டுமே ஆகும்.

இதனால் பல முன்னணி மொபைல் நிறுவனங்களான லாவா, இண்டெக்ஸ், மைக்ரோமேஸ், கார்பன் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு செலவைக் குறைக்க வேண்டி உள்ளது.   அதனால் தங்களது விற்பனைப் பிரிவில் இந்த நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வருகின்றன.   அதுவும் பல நிறுவனங்கள் கூட்டாக விற்பனை செய்யப்படும் கடைகளில் இந்த ஆட்குறைப்பு அதிகம் செய்கின்றன.

ஒவ்வொரு கடையிலும் நிறுவனம் ஒன்றுக்கு முன்பு 14 பேர்கள் இருந்த நிலையில் தற்போது 5 ஆக குறைக்கப்பட்டுள்ளனர்.    மேலும் கூட்டாக விற்பனையாளர்களை இந்த கடையில் பணிக்கு அமர்த்தி உள்ளனர்.   அத்துடன் தற்போதுள்ள பணியாளர்களின் குறைந்தபட்ச ஊதியம்  ரூ.18000 ஆக இருந்ததை ரூ.14000 அக குறைத்துள்ளனர்.

இந்த ஆட்குறைப்பினால் ஆயிரக்கணக்கானோர் பணி இழந்துள்ளனர்.   மேலும் பணியில் உள்ளவர்களின் ஊதியமும் குறைக்கப் பட்டுள்ளதால்பல ஊழியர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.