அமெரிக்காவின் பிரபல பாப் இசை பாடகர் நிப்சி ஹூஸல் சுட்டுக்கொலை

--

நியூயார்க்:

மெரிக்காவின் பிரபல பாப் இசை பாடகர் நிப்சி ஹூஸல் மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவரது பெயர் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 33 வயதாகும் பிரபல பாப், ராப்  இசை பாடகராகரான பாடகர் நிப்சி ஹூஸல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் துணிக்கடை நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று நிப்சி ஹூஸல்  மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள் ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நிப்சி ஹூஸல் பெயர்  கிராமி விருதுக்கு அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.