என் மரணத்துக்குக் காரணம் இவர்கள்தான்!: செல்ஃபியில் சொல்லிவிட்டு காமெடி நடிகர் தற்கொலை

ஹைதராபாத்:

தெலுங்கு திரையுலகின் பிரபல காமெடி நடிகர் விஜய் சாய் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

பொம்மாரில்லு என்னும் புகழ்பெற்ற தெலுங்குப் படம் உள்பட பல படங்களில் நடித்தவர் காமெடி நடிகர் விஜய் சாய். ஹைதராபாத்தில் உள்ள ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் வசித்து வந்த விஜய் சாய் இன்று காலை அவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.   ஏற்கனவே
மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார் விஜய் சாய். கடும் பணக் கஷ்டத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து மேலும் விவரம் வருமாறு “
நடிகர் விஜய் சாய்க்கும், அவரது மனைவிக்கும் விவாகரத்து நடந்துள்ளது.. விஜய்யின் முன்னாள் மனைவி அவரை டார்ச்சர் செய்து பணம், நகை ஆகியவற்றை முழுவதுமாக பறித்துக் கொண்டாராம்.  இதனால் தான் இவர் பணக்கஷ்டத்தில் அவதிப்படுவதாக கூறப்படுகிறது.

விஜய்யின் முன்னாள் மனைவி

அது மட்டுமின்றி
விஜய் சாயை அவரது மகளை பார்க்கவிடாமல் அவரின் முன்னாள் மனைவி கொடுமைப்படுத்தினாராம். அத்துடன் விஜய் வைத்திருந்த மாருதி ஸ்விப்ட் காரையும் ஆட்கள் மூலம் அவர் மனீவி எடுத்துச் சென்றுவிட்டாராம்.
இன்று காலை 4 மணி முதல் 5 மணிக்குள் விஜய் சாய் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. தனது தற்கொலைக்கு முன்பு அவர் தனது செல்போனில் செல்ஃபி வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ பதிவில் தனது சாவுக்கு காரணம் தனது  முன்னாள் மனைவியும் அவரின் வழக்கறிஞர், இயக்குனர் சசிதரும் என்று கூறியுள்ளாராம்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.