காதலரைக் கரம் பிடித்தார் பிரபல தொகுப்பாளினி திவ்யா…!

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி பிரபலமானவர் திவ்யா.

விஜய் தொலைக்காட்சியைத் தொடர்ந்து புதுயுகம் தொலைக்காட்சியில் ‘நட்சத்திர ஜன்னல்’ நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.

மேலும், விஜய் நடித்த ‘வில்லு’ படத்தில் ‘தீம்தனக்கா தில்லானா’ பாடலின் மூலம் பாடகராகவும் அறிமுகமானார்.

கடந்த டிசம்பர் 27-ம் தேதி இவருக்கும், ஷிபு தரகன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஷிபு திவ்யாவின் நீண்ட கால நண்பர் மற்றும் காதலர் இந்தத் திருமணத்தில் பாடகர்கள் ஹரிசரண், விஜய் யேசுதாஸ், நரேஷ் ஐயர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பாடகர் ஹரிசரண் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் திவ்யாவின் திருமணப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.