பிரபல சினிமா கலைஞர் VFX பாலமுருகன் மரணம்…..!

சமீப காலமாக பல சினிமா நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் அடுத்தடுத்து மரணித்து வருவது ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று தான் நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம் அடைந்தார்.அந்த காயம் ஆறுவதற்கு முன்பு அடுத்ததாக திரைத்துறையில் மற்றொரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

புகழ்பெற்ற VFX கலைஞரான பாலமுருகன் தற்போது மரணமடைந்துள்ளார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமி இந்த செய்தியை முதல் ஆளாக பகிர்ந்துள்ளார்.