ஆபாச சிடியில் அமைச்சர்: அரைமணி நேரத்தில் நீக்கிய கெஜ்ரிவால்!

புதுடில்லி:

பாச சிடியில் இடம்பெற்ற தனது அமைச்சரை, சிடி கிடைத்த அரை மணி நேரத்தில் அதிரடியாக நீக்கியிருக்கிறார் டில்லி முதல்வர் கெஜ்ரிவால்.

jeriwal s

டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநில அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் அமைச்சர் சந்தீப் குமார், ஒரு பெண்ணுடன் ஆபாச நிலையில் இருக்கும் சிடி காட்சி இன்று வெளியானது.

இந்த சி.டி., முதல்வர் கெஜ்ரிவால் பார்வைக்கும் சென்றது. அடுத்த அரை மணி நேரத்தில் அமைச்சர் சந்தீப்குமாரை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார் கெஜ்ரிவால். இம்முடிவை ஆம்ஆத்மி கட்சி உயர் கமிட்டி முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி