எங்க நிர்வாண படங்களை வெளியிடாதபடி பார்ததுக்குங்க..!: சென்னை காவல்துறை ஆணையாளரிடம் இரு இளம் பெண்கள் புகார் மனு

சினிமா வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி, பாலியல் தொல்லை அளித்ததாக காஸ்டிங் இயக்குநர் மோகன் மீது இரு இளம் பெண் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

துணை நடிகர்கள் மற்றும் மாடல்களுக்கு ஏஜெண்டாக உள்ளவர் மோகன். இவர் தன்னை கேஸ்டிங் டைரக்டர் என்று கூறிக்கொள்கிறார்.

மோகன்

இந்த நிலையில் இவர் மீது பாலியல் புகார் கூறி ஒரு மாடலிங் பெண், சமூகவலைதளத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ‘ காஸ்டிங் இயக்குநரான மோகன், தன்னையும் தனது தோழியையும், மேலும் பல பெண்களையும் பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்திக்கொண்டார். திரைப்பட  வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை ஆசை வார்த்தைக் கூறி மோகன் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருகிறார். இதை வெளியில் சொன்னால் அப்பெண்கள் பலருடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து வைத்திருப்பதாகவும், அதனை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் மோகன் மிரட்டுகிறார்” என்று கூறியிருந்தார்.

மேலும், மோகன் சில பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோக்களையும் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் இரு இளம்பெண்கள், சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் ஒரு புகாரை அளித்திருக்கிறார் அளித்திருக்கிறார்கள். அதில், :காஸ்டிங் மோகன் என்பவர் சினிமா வாய்ப்பு வாங்கித்தருவதாக கூறினார். அதற்காக எனது நிர்வாண படங்களை அனுப்ப வேண்டும் என்று தெரிவித்தார். நான் மறுத்தேன். ஒரு கட்டத்தில் அப்படிஅனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது.

புகார் அளிக்க வந்த பெண் மற்றும் அவர் தோழி

தற்போது மோகன் சில பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வருகிறது. எனது நிர்வாண படங்களையும் மோகன் சமூகவலைதளங்களில் பரப்பி விடுவாரோ என்ற அச்சத்தலேயே புகார் அளிக்கிறேன். 

அவர் எனக்கு அளித்த பாலியல் துன்புறுத்தல்களால் நான் மன ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.  மோகனுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தருமாறு கோருகிறேன்” என்று இரு இளம்பெண்களும் அளித்த தனித்தனி புகார்களில் தெரிவித்துள்ளனர்.  

இதற்கிடையே காஸ்டிங் மோகன், இந்த வீடியோ காட்சிகள் அனைத்தும் தனக்கு தெரியாமல் தனது செல்போனில் இருந்து ஹேக் செய்து திருடப்பட்டவை என்றும், தனது அறையில் ரகசிய காமிரா பொறுத்தப்பட்டிருப்பது தனக்கே தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.