“உட்தா பஞ்சாப்” திரைப்படம் குறித்த மும்பை உயர்நீதி மன்ற தீர்ப்பை அடுத்து இனி ஆபாசமாக படம் எடுக்க சுதந்திரம் கிடைத்துவிட்டது” எனறு  தணிக்கை வாரியத் தலைவர் நிஹலானி கருத்து தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில நடக்கும் போதை மருந்து கடத்தை அடிப்படையாக வைத்து “உட்தா பஞ்சாப்” என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டது. “இந்தத் திரைப்டம் பஞ்சாப் மாநிலத்தை அநாகரீகமாக சித்தரிக்கிறது” என்று தணிக்கை வாரியத்தலைவர் நிஹலானி தெரிவித்தார். படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டது.
இதையடுத்து படக்குழுவினர் மும்பை உயர்நீதிமனறத்தை நாடினர். “படத்துக்கு சான்றிதழ் கொடுப்பதுதான் தணிக்கை வாரியத்தின பணியே தவிர காட்சிகளை வெட்டச் சொல்வது அல்ல” என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
201606142059555288_Pahlaj-Nihalani-welcomes-HCs-decision-on-Udta-Punjab_SECVPF
இதையடுத்து இன்று “உட்தா பஞ்சாப்” திரைப்படம் உலகம் முழுதும் வெளியாகிறது.
மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பு கறித்து தணிக்கை வாரிய தலவர் நிஹலானி, “இனிமேல் தணிக்கை வாரியம் பரிந்துரைக்கும் ஒவ்வொரு வெட்டுக்கும் நீதிமன்றத்தை படத்தயாரிப்பாளர்கள் அணுகுவார்கள். இந்தத் தீர்ப்பு தயாரிப்பாளர்களுக்கு மிகவும் நல்லதாகும்.
ஏனெனில் நானும் தயாரிப்பாளராக இருந்தவன். நான் சட்டப்படியே என் பணிகளைச் செய்தேன். ஆனால் இனி  தயாரிப்பாளர்களுக்கு  விரசமான, மோசமான காட்சிகளைப் படத்தில் இடம்பெறவைக்க  சுதந்தரம் கிடைத்துள்ளது.  அவர்கள் எப்படி படம் எடுத்தாலும் ஏ சான்றிதழுடன் படம் வெளியாக அனுமதி கிடைக்கும்”  என்று தெரிவித்தார்.