சென்னை :
ங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. சென்னையை நோக்கி நகர்ந்து வரும் இந்த புயல் சின்னம் டிசம்பர் 2 அல்லது 3ந்தேதி வேதாரண்யம் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
chennai2
தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார். கடல் பகுதியில் வேகமான காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் உடனே கரைக்குத் திரும்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது வலுப்பெற்று அதே இடத்தில் நீடிக்கிறது. இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது மேலும் வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது வடதமிழகம், புதுவையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக சென்னை உள்பட பெரும்பாலான பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.  தமிழகம், புதுவையில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

புயல் எச்சரிக்கை கூண்டு
புயல் எச்சரிக்கை கூண்டு

காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக தமிழகம், புதுவை கடற்பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இன்று முதல் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனே கரைக்குத் திரும்ப எச்சரிக்கப்படு கிறார்கள் .
வங்கக் கடலில் உருவான “கியாந்த்’ புயலின் காரணமாக வடகிழக்கு பருவமழையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 1 -ம் தேதி முதல் இதுவரை, இயல்பைவிட 70 சதவீதம் மழை குறைவாகப் பெய்துள்ளது.
தமிழகத்தின் சராசரி ஆண்டு மழை அளவு 32 செ.மீ. ஆகும். ஆனால் இந்த ஆண்டு 10 செ.மீ. மழை தான் பெய்துள்ளது.
வடமாநிலங்களில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், அங்குள்ள குளிர் காற்று தெற்கு நோக்கி நகர்ந்துள்ள தால், தமிழகத்தில் குளிர்காற்று வீசக்கூடும். இரவு நேரங்களில் பனிப்பொழிவும் காணப்படும். இதனால் பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த வரும் இதே நாளில் சென்னை தண்ணீரில் தத்தளித்துகொண்டிருந்தது. அதே நாளில் தற்போதும் புயல் உருவாகி கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்து உள்ளதால் சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள பொதுமக்கள் அச்சத்தோடே காணப்படுகிறார்கள்.