கடலில் விழுந்த பெண்களை அதிரடியாக மீட்ட 71வயது போர்ச்சுக்கல் அதிபர்… வீடியோ

லிஸ்பன்: கடலில் விழுந்து உயிருக்கு போராடிய இரு பெண்களை  அந்நாட்டு அதிபர், மார்செலோ ரெபெலோ டிசோசா அதிரடியாக கடலில் குதித்து காப்பாற்றினார். இந்த சம்பவம் கடந்த 17ந்தேதி நடைபெற்றுள்ளது.
தெற்கு ஐரோப்பிய நாடான போர்ச்சுகல் சுற்றுலா பகுதிகள் நிறைந்த நாடாகும். இந்த   நாட்டுக்கு உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர்.  நாட்டின் பொருளாதாரமே சுற்றுலாவை நம்பியே உள்ளது.
ஆனால், நடப்பாண்டில் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று, அந்நாட்டு சுற்றுலாவை கடுமையாக பாதித்துள்ளது. இதனால், வீழ்ந்துள்ள சுற்றுலாத்துறையை மேம்படுத் தும் வகையில், போர்க்கல் அதிபர், மார்செலோ ரெபெலோ டிசோசா (வயது 71), அல்கார்வே கடற்கரை நகருக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்குள்ள கடற்கரையில்,  பொதுமக்களுடன் சேர்ந்து அவர் நீந்திக்கொண்டிருந்தார். அப்போது, சிறிய படகில் கடலுக்குள் சென்ற இளம்பெண்களின் படகு ஒன்று அலையில் சிக்கி கவிழ்ந்தது. இதனால், அப்பெண்கள்  கடலில் விழுந்து உயிருக்கு போராடினார்.
இதைக்கண்ட அதிபர்,  உடனடியாக, விரைவு படகில் சென்று, அந்த  இரு பெண்களையும் காப்பாற்றி னார்.  கடலில் தத்தளித்த பெண்களை, ‘ஹீரோ’ போல் செயல்பட்டு, விரைவாக மீட்ட அதிபருக்கு, பாராட்டுகள் குவிகின்றன.