சென்னை:

ரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் முழுமுடக்கம் அமலில் உள்ளது. அதேபோல் மதுரை மாநகராட்சி பகுதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த முழு பொதுமுடக்கம் மேலும் 7 நாட்கள் நீட்டிக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வந்த நிலையில் தற்போது சென்னையை விட பிற மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், சென்னையில் பாதிப்பு குறைவதாகவும் தகவல்கள் வெளியாகியது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது,

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது தற்காலிக வெற்றிதான். பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்று சொல்வதை விட அதை தடுக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் மதுரை, ராமநாதபுரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டையில் பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.