3.0 எடுக்க வாய்ப்பு: 2.0 டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஷங்கர் பேச்சு

சென்னை:

ஜினி நடிப்பில், மிகப் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள 2.0 திரைப்படத்தின் டிரைலர் இன்று நண்பகல் 12.50 மணிக்கு வெளியாகி உள்ளது. சென்னை சத்யம் காம்ப்ளக்சில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 மொழிகளில் 2.0 படத்தின் டிரைலர் வெளியானது.

விழாவில் பேசிய இயக்குனர் ஷங்கர், இதன் தொடர்ச்சியாக 3.0 எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார்.

இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில், கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘எந்திரன்’. மிகப்பெரிய பொருட்செலவில் உருவான இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதைத்தொடர்ந்து எந்திரன் 2ம் பாகம் 2.0 என்ற பெயரில் உருவானது.

இந்த படத்தின்  டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இன்று டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த டிரைலர் வெளியிட்டுவிழா  சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன், இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்றார்.

இதைத்தொடர்ந்து, படத்தின் டிரைலர் சரியாக நண்பகல் 12.30 மணிக்கு வெளியாகி உள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய  இயக்குனர் ஷங்கர், 2.0 படத்தின் தொடர்ச்சியாக 3.0 படம் எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார். அதற்கான சின்ன சின்ன ஐடியாவும் இருக்கிறது. கதை தோன்றினால் 3.0 படம் உருவாக அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.