புண்ணியம் செய்த கங்காதரன் பிள்ளை.

பரிமலை ஸ்ரீ ஐயப்பன் ஆபரணப் பெட்டியை சுமந்து வரும் கங்காதரன் பிள்ளையை பற்றிய முகநூல் பதிவு


சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் சாமி நைஷ்டிக பிரம்மச்சாரியாக இருப்பதால் ஆபரண அலங்காரத்துடன் காட்சி தருவதில்லை.   ஐயப்பனின் வளர்ப்புத் தந்தையும் பந்தள அரசருமான ராஜசேகர பாண்டியன் ஐயப்பனிடம் ஆபரண கோலத்துடன் தரிசிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

தந்தையின் மன திருப்திக்காக மகர விளக்கு அன்று மட்டும் ஐயப்பன் ஆபரண அலங்காரத்துடன் காட்சி அளிக்க ஒப்புக் கொண்டார்.  இதனால் மகர விளக்கு சமயத்தில் ஐயப்பனின் ஆபரணங்கள் கொண்ட பெட்டி சபரிமலைக்கு பந்தள அரண்மனையில் இருந்து எடுத்து வரப்படுகிறது.

அப்போது அதற்கு காவலைப் போல் ஒரு கருடன் கூடவே பறந்து வருவது வழக்கமாகும்.  இவ்வாறு சபரிமலைக்கு ஸ்ரீ ஐயப்பனின் ஆபரண பெட்டியைக் கடந்த 50 வருடமாகத் தலையில் சுமந்து கால்நடையாக எடுத்து வருபவர் கங்காதரன் பிள்ளை என்பவர் ஆவார்.

அவரைப்பற்றி என் ஐயப்பன் ஏழைப்பங்காளன் என்னும் முகநூல் பதிவில் காணப்படுவதாவது

” புண்ணியம் செய்த #கங்காதரன் பிள்ளை அரை நூற்றாண்டாக திரு_ஆபரணபெட்டி தலையில் சுமந்து ஐயப்பனுக்கு கொண்டு செல்லும் மனிதர் . . .

சுவாமி_சரணம்”