நாளை முதல் மீண்டும் இந்தியன் – 2, மூக்குத்திஅம்மன் உள்ளிட்ட படங்களின் இறுதிக்கட்ட வேலைகள் தொடக்கம்…..!

--

கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் மேல் ஆகின்றன.

திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால், படங்களை வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தில் இருக்கிறார்கள்.

இதனால், தயாராகி இருக்கும் படங்கள் பலவும் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று முதல் சென்னையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சின்னத்திரை படப்பிடிப்பு மற்றும்திரைப்பட இறுதிக்கட்ட பணிகள்நாளை முதல் மீண்டும் தொடங்கப்படுகின்றன.

இதில், இந்தியன் – 2, மூக்குத்திஅம்மன் உள்ளிட்ட படங்களின் இறுதிக்கட்ட வேலைகள் நாளை தொடங்க ஃபெப்சி அனுமதி அளித்துள்ளது.