வெற்றி வித்தியாசம் குறைவாக இருந்தால் தபால் ஓட்டு மீண்டும் எண்ணப்படும்: ராஜேஷ் லக்கானி

download

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:

“232 தொகுதிகளுக்கு நாளை காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு அளிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

5 நிமிடத்துக்கு ஒரு முறை முடிவு விவரங்கள் தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியிடப்படும்.

வேட்பாளரின் வெற்றி வித்தியாசம் குறைவாக இருந்தால் தபால் ஓட்டுகள் மீண்டும் எண்ணப்படும்” இவ்வாறு ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: election, Postal votes, Rajesh lakkani, தபால் ஓட்டுகள், தேர்தல் 2016, ராஜேஷ் லக்கானி
-=-