Random image

போஸ்டர், பேனர், பதாகைகளை தலைமை மன்றத்துக்கு அனுப்பி அனுமதி பெற வேண்டும்: ரஜினிகாந்த்

சென்னை:

ரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றங்களாக மாற்றினார்.

அதைத்தொடர்ந்து அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு வரும் ரஜினி, தற்போது,  தனது மக்கள் மன்ற நிர்வாகிகள் போஸ்டர், பேனர், பதாகைகளை தலைமை மன்றத்துக்கு அனுப்பி அனுமதி எண் பெற்ற பிறகே வைக்க வேண்டும்.. என்று கூறி உள்ளார்.

அவ்வப்போது அரசியலுக்கு எதிராக அதிரடியாக கருத்துகூறி பரபரப்பு ஏற்படுத்தி வந்த ரஜினி, தனது ரசிகர்கள் மன்ற நிரவாகிகளை சந்தித்து பேசியதை தொடர்ந்து,  கடந்த 2017ம் வருடம்  டிச.31 அன்று, அரசியலுக்கு வருவதாக ரஜினி அறிவித்தார்.

தொடர்ந்து ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி நிர்வாகிகளை நியமனம் செய்தார். இடையிடையே படத்தில் நடிக்கவும், இமய மலைக்கும் சென்று வந்தார்.  அரசியல் கட்சி எப்போது தொடங்குவீர்கள் என்ற கேள்விக்கு, அஸ்திவாரம் பலமாக போடப்படுவதாக கூறி விட்டு மீண்டும் படப்பிடிப்புக்கு சென்று வந்தார்.

‘தற்போது சன் பிக்சர்சின் பெயரிடப்படாத படத்தில் நடித்து வரும் ரஜினி, திடீரென தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய உத்தரவு போட்டுள்ளார்.

அதன்படி,  தனது மக்கள் மன்ற நிர்வாகிகள் போஸ்டர், பேனர், பதாகைகளை தலைமை மன்றத்துக்கு அனுப்பி அனுமதி எண் பெற்ற பிறகே வைக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.  இது அவரது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.