Random image

கேரளா : சுவரொட்டி தகராறில் மாணவர் படுகொலை

ர்ணாகுளம்

ர்ணாகுளம் கல்லூரியில் சுவரொட்டி ஒட்டுவதில் உண்டான தகராறில் மாணவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் மூணாரு பகுதியை சேர்ந்த மாணவர் அபுமன்யு என்பவர் எர்ணாகுளத்தில் மகாராஜா கல்லூரியில் படித்து வந்தார்.   இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி பதவியும் அபிமன்யு வகித்து வந்துள்ளார்    இவருக்கு எஸ்டிபிஐ கட்சி மாணவர்களுக்கும் இடையே ஏற்கனவே தகராறு இருந்துள்ளது.

சமீபத்தில் கல்லூரியின் சுற்றுச் சுவரில் சுவரொட்டி ஒட்டுவதில் இரு தரப்பினரும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.    நேற்று இரவு கல்லூரி விடுதியில் அபிமன்யு தூங்கிக் கொண்டு இருந்துள்ளார்.   அப்போது அங்கு நுழைந்த சுமார் 15 பேர் கொண்ட ஒரு கும்பல் அபிமன்யுவை கத்தியால் வெட்டிக் கொன்றுள்ளது.  இதை தடுக்க வந்த மாணவர்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த அர்ஜுன் என்னும் மாணவர் தீவிர சிகிச்சப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.    அபிமன்யுவை கொலை செய்ததாக எஸ்டிபிஐ கட்சியினர் மூவர் கைது செய்யபட்டுள்ளனர்.   சுவரொட்டி தகராறுக்காக மணவர் விடுதியினுள் வெட்ட்க் கொல்லபட்டது இந்த பகுதியில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.