சென்னை : தமிழகத்தில் கொரோனா பணியில் முதுநிலை மருத்துவக்கல்லூரி மாணாக்கர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதால்,  முதுகலை மருத்துவ தேர்வுகள் 3 மாதம் ஒத்தி வைக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது, வரும் 24ம் தேதி முதல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாணாக்கர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா காரணமாக பொதுமுடக்கல் அமலில் உள்ளதால், கல்விநிறுவனங்கள் அடைக்கப்பட்டு உள்ளன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சில தளர்வுகள் காரணமாக,  ஒத்தி வைக்கப்பட்ட இறுதியாண்டு தேர்வுளை நடத்துவதில் மத்தியஅரசு தீவிரம் காட்டி வருகிறது.

அதைத்தொடர்ந்து ஏற்கனவே ஆகஸ்ட் 17ம்  தேதி நடைபெறுவதாக  அறிவிக்கப்பட்ட  முதுகலை மருத்துவத் தேர்வுகள், மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாதாக தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது, ஒத்திவைக்கப்பட்ட முதுகலை மருத்துவ தேர்வுகள் வரும் 24ம் தேதி முதல் நடைபெறும் என்று  மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அத்துடன் தேர்வு அட்டவணையையும்வெளியிட்டுள்ளது.

மருத்துவக் கல்வி இயக்கத்தின் இந்த திடீஅர அறிவிப்பு முதுநிலை மருத்துவ மாணாக்கர்களி டையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  பாடகத்தில் கவனம் செலுத்தாமல், அரசின் வேண்டு கோளை ஏற்று,  கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலை யில், இந்த திடீர் அறிவிப்பு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.