டெல்லி: அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று யுஜிசிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் உயர்கல்வி நிறுவனங்களுக்கு 3 மாதங்கள்  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு 2வது செமஸ்டர் தேர்வு நடத்தப்படவில்லை.
இந் நிலையில் கல்லூரிகள், பல்கலை. இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டியது கட்டாயம் என்று யுஜிசி அறிவித்தது. இது குறித்து ராகுல் காந்தி தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

கொரோனா பரவல் காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமல்ல. மாணவர்கள், கல்வியாளர்களின் குரல்களை யுஜிசி கட்டாயம் கேட்க வேண்டும். எனவே அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும். முந்தைய தேர்வுகளில் மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.