டெல்லி:

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பாதிப்பை, “உலகளாவிய நோய்த்தொற்று” உலக சுகாதார அமைப்பு (who) அறிவித்து உள்ளது.

இந்தியாவிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார். இன்றைய நிலையில் 73 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், வெளிநாட்டு விசா உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த நிலையில், இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய விளையாட்டுத்துறை, ஐபிஎல்  திருவிழாவை ஒத்திவைப்பது நல்லது என பிசிசிஐக்கு அறிவுறை கூறியுள்ளது.

வரும் 14 ஆம் தேதி பிசிசிஐ பொதுக்குழுவில் ஐபிஎல் விளையாட்டை நடத்துவது தொடர்பாக கலந்தாலோசிக்கப்படும் என அறிவிக்கபட்ட நிலையில், போட்டிகளை ஏப்ரல் மாத இறுவரை ஒத்திவைக்க வேண்டுமென பிசிசிஐ க்கு மத்திய அமைச்சரவை அறிவுரை கூறியுள்ளது.

விளையாட்டுத்துறைச் செயலர் ராதே ஷ்யாம் ஜிலானியா இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,  உலகின் பல நாடுகளில் கொரோனா வைரசால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. பொதுவிடங்களில் மக்கள் கூடுவதும் இந்நோயை எளிதாக பரவச்செய்யும். ஏப்ரல் 15 வரை வெளிநாட்டினருக்கு விசா வழங்குவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய கோல்ஃப் கமிட்டியும் கோல்ஃப் ஓப்பன் போட்டிகளை ஒத்திவைத்துள்ளது. எனவே ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ அடுத்த மாத இறுதிவரை ஒத்திவைக்க வேண்டும்.

”மேலும் தற்போதையச் சூழலில் வெளிநாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் யாருமற்ற அரங்கில் போட்டிகள் நடைபெறுவதுதான் நாட்டிற்கு நல்லது” என ஜிலானியா நகைச்சுவையாகக் கூறினார்.

இது தொடர்பாக விளையாட்டு அமைச்சகம் நாட்டின் அனைத்து விளையாட்டு கூட்டமைப்புகளுடன் ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக இறுதி முடிவு சனிக்கிழமையன்று எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2020 ஜூலை மாதம் ஜப்பானில்32 ஆவது ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் ஒலிம்பிக் கமிட்டி மற்றும் ஜப்பான் அரசும் போட்டிகளை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

++++++