‘மின்வாரிய ஊழல்:’ அமைச்சர் தங்கமணிக்கு ஒரு வாரம் ‘கெடு’: மு.க.ஸ்டாலின்

சென்னை:

காற்றாலை மின்சார முறைகேடு விவகாரம் தொடர்பாக தன் மீது ஒரு வாரத்திற்குள் வழக்கு தொடர வேண்டும் என்று அமைச்சர் தங்கமணிக்கு, மு.க.ஸ்டாலின்  கெடு விதித்துள்ளார்.

தமிழக மின்வாரியத்தில். காற்றாலை மின்சார கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கமணி,  ஊழல் நடைபெற்றுள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறுவது தவறானது, அவர்மீது வழக்கு தொடருவேன்  என்று தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி பதில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று ஊழலுக்கான ஆதாரத்தை மு.க.ஸ்டாலின் வெளியிட்டு அமைச்சருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின்,  காற்றாலை மின்சாரத்தில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ளேன். இப்போதாவது அமைச்சர் தங்கமணி சொன்ன மாதிரி என் மீது உடனடியாக வழக்கு போட வேண்டும் என்று கூறினார்.

இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக ஒரு வாரம் பொறுமை காப்பேன் என்ற ஸ்டாலின்,  அதறகுள் என்மீது அமைச்சர் வழக்கு போட வில்லை என்றால், தற்போது  குட்கா பிரச்னையை சிபிஐ வரை கொண்டு சென்று விசாரணை நடைபெறுகிறதோ அதைபோல் இதையும் கொண்டு செல்வோம்.

என் மீது வழக்கு போடுவேன் என சொன்ன தங்கமணி வழக்குப் போடத் தயாரா?.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.