சென்னை:

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. இந்த  நிலையில், மின்சார வாரியத்துக்கு செலுத்த வேண்டிய மின் கண்டனம் செலுத்தவில்லை என்றால்,  மின் இணைப்பு துண்டிக்கப்படும்  என்று செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், இது ‘வதந்தி’ மின்வாரியம் என  விளக்கம் அளித்து உள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, மின்வாரிய ஊரியர்கள் வீடுகளுக்கு சென்று ரீடிங் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், தாழ்வழுத்த மின் இணைப்பு (Low tension & low tension current tranformer) கொண்ட வீடுகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் கங்நம மார்ச்-ஏப்ரல் மாத கட்டணத்தை முந்தைய மாத கணக்கீட்டின்படி செலுத்தலாம் என்று  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

அதுபோல், பயனாளர்கள் நெட்பேங்கிங், மொபைல் பேங்கிங், பேமண்ட் கேட்வே, பிபிபிஎஸ் (BBPS) முதலிய ஆன்லைன் சேவைகள் மூலம் கட்டணத்தை செலுத்தலாம் எனவும், பணம் செலுத்த மின் கட்டண கவுண்டர்களுக்கு வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வெளியாகி வரும் தகவல்கள் வதந்தி என்றும், அதுபோல எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்து உள்ளது.