கடந்த 2011-ம் ஆண்டு லத்திகா எனும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பவர் ஸ்டார் எனும் நடிகர் சீனிவாசன்.

இவர் ஒரு மருத்துவர் என்றாலும், திரையுலகில் காமெடியன் கதாபாத்திரத்திலேயே நடித்தார்.

பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.

இதற்கு முன் ஜனவரி மாதம், ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதால் இதே மருத்துவமனையில் பவர்ஸ்டார் அனுமதிக்கப்பட்டிருந்தார்.