“எனக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது” – ஸ்ரீரெட்டி

நடிகைகளை படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் திரைத்துறையில் இருப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியவர் நடிகை ஸ்ரீரெட்டி.

சமூகவலைதளங்களில் தொடர்ந்து #METOO புகார்களை பதிவிட்டு வந்தார். தெலுங்கு திரையுலகம், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த், விஷால் உள்ளிட்டோர் மீது புகார்களைத் தெரிவித்தார் நடிகை ஸ்ரீரெட்டி.

இந்நிலையில் அவரின் பெயரில் உள்ள மற்றோரு பேஸ்புக் பக்கத்தில் நடிகரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பற்றிய அவதூறு பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு விளக்கமளித்த ஸ்ரீரெட்டி, “எனக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது. என் பெயரை யாரோ தவறாக உபயோகப்படுத்துகிறார்கள் என்று கூறியுள்ளார்.