இலங்கையில் தடையை மீறி பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாட்டம்

கொழும்பு:

இலங்கையின் வடபகுதியில் உள்ள விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் அவரது 63-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

முன்னதாக பிரபாகரன் பிறந்த தினத்தைக் கொண்டாடுவது சட்டவிரோதம் என்று அறிவித்து இலங்கை அரசு தடை விதித்திருந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வடக்கு மாகாண கவுன்சில் உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் இந்த கொண்டாட்டம் தடையை மீறி நடைபெற்றது.

இதில் தமிழ் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். கேக் வெட்டியும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.