பிரபாஸ் 20 படத்துக்கு 2 டைட்டில்? டைரக்டர் கப்சிப்..

சாஹோ’ படத்துக்கு பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம். இந்தி என 4 மொழிகளில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். இது இவர் நடிக்கும் 20வது படம். லாக்டவுனுக்கு முன்பு ஜார்ஜியாவில் படக் குழு படப்பிடிப்பு நடத்த சென்றது. கொரோனா ஊரடங்கால் பாதியிலேயே திரும்பிவந்தது. மனோஜ்பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய இப்படத்தை ராதா கிருஷ்ணா குமார் டைரக்டு செய்கிறார். இதில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.


இப்படத்துக்கு ’ராதே ஷியாம்’ மற்றும் ‘ஓ டியர்’ என பெயரிடப்படவுள்ளதாக தகவல் பரவியது. இதுகுறித்து இயக்குனரிடம் கேட்டால் அவர் பதில் எதுவும் சொல்லாமல் மவுனம் காக்கிறார். இப்படத்துக்கு பிறகு நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் நடிக்கிறார் பிரபாஸ்.